2021 மற்றும்‌ 2022ஆம்‌ ஆண்டு முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்காகத் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.


முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கம் மற்றும் தகுதியரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் யார்? விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம்.


இதுகுறித்துத் தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்கான 2021 மற்றும்‌ 2022ஆம்‌ ஆண்டு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


தகவல்‌ தொழில்‌நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம்‌ கணினி வழித்‌ தமிழ்‌ மொழி பரவச்‌ செய்யும்‌ வகையில்‌ கணினித்‌ தமிழ்‌ வளர்ச்சிக்காக சிறந்த தமிழ்‌ மென்பொருள்‌ உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருது என்ற பெயரில்‌ விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத்‌ தொகையாக ரூபாய்‌ 2 இலட்சம்‌, ஒரு சவரன்‌ தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்படுகிறது.


அந்த வகையில்‌ 2021ஆம்‌ ஆண்டுக்குரிய முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்கு மென் பொருள்களுக்கான விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு பரிசீலனையில்‌ உள்ளது. மேலும்‌ 2021ஆம்‌ ஆண்டுக்கு கூடுதல்‌ விண்ணப்பங்களும்‌, 2022ஆம்‌ ஆண்டுக்கு தனியர்‌ மற்றும்‌ நிறுவனத்திடமிருந்து, தமிழ்‌ வளர்ச்சிக்கான மென் பொருள்கள்‌ விண்ணப்பங்களும்‌ வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென் பொருள்கள்‌ 2018, 2019, 2020, 2021 ஆம்‌ ஆண்டுகளில்‌ தயாரிக்கப்பட்டதாக இருத்தல்‌ வேண்டும்‌.


இதையும் வாசிக்கலாம்:  TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வர்களின் விடைத்தாள்கள் வெளியீடு; எப்படி செக் செய்வது?- முழு விவரம் https://tamil.abplive.com/education/tntet-exam-2022-teachers-eligibility-test-attempt-question-paper-released-know-here-how-to-check-80339/amp


இவ்விருதுக்குரிய விண்ணப்பம்‌ மற்றும்‌ விதிமுறைகளைத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வலைக்‌ தளத்தில்‌ (www.tamilvalarchithurai.com) இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


விருதுக்கான விண்ணப்பம்‌ தமிழ்‌ வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள்‌ 31.12.2022


விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்,
தமிழ்‌ வளர்ச்சி வளாகம்‌ முதல்‌ தளம்‌, 
தமிழ்ச்சாலை, எழும்பூர்‌, 
பின் கோடு - 600 008


தொலைபேசி எண்கள்: 044 - 28190412 / 044 - 28190413


இ-மெயில் முகவரி: tvt.budget@gmail.com''


இவ்வாறு தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Scholarship Scheme: மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?- விவரம்