TN Weather Update: பொளக்கப்போகும் வெயில்.. 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

அதன்படி இன்று, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு  இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.  

அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக 32.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

Continues below advertisement