மேலும் அறிய

Weather Update: சனி, ஞாயிற்றுக்கிழமையில் கொட்டப்போகும் மழை: : கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளையும், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (19-02-2026) பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று (20-02-2026) காலை 0830 மணி அளவில் வழுவிழந்தது. பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும். தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 20-02-2026 அன்று தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

21-02-2026 அன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

22-02-2026 அன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னதுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

23-02-2026 மற்றும் 24-02-2026 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 25-02-2026 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-02-2026 அன்று தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

இன்று (20-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (21-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

20-02-2026 இன்று மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-02-2026 முதல் 24-02-2026 வரை : எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்

20-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய பூமத்தியரேசைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-02-2026: தென்மேற்கு- தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-02-2026 மற்றும் 24-02-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:

21-02-2026 மற்றும் 22-02-2026: கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20-02-2026, 23-02-2026 மற்றும் 24-02-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Roundup: இன்று திமுக நேர்காணல், குறைந்த தங்கம் விலை, ஈபிஎஸ் மீது ஒபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: இன்று திமுக நேர்காணல், குறைந்த தங்கம் விலை, ஈபிஎஸ் மீது ஒபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்குள் துரோகிகள்.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்குள் துரோகிகள்.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Gold rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Embed widget