TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
Tamil Nadu Weather Forecast: நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் நவ.23 வரை எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை என்பதற்கான பட்டியலை இங்கே காணலாம்.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 17) மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிற்பகலில் இருந்து மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறும்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் 7 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 17) மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 17) கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (நவம்பர் 18) 8 மாவட்டங்களில் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 19, 20 கனமழை வாய்ப்பு
நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

15 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு
நவ. 22- தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 23ஆம் தேதி அன்று சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் ஏற்கெனவே ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உள்ள நிலையில், மேலும் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதாகவும் இதனால் மழை வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கி, தற்போது தீவிரமடைந்து வருவது நினைவுகூரத்தக்கது.






















