இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.
ஜூலை 20,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.
- முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைக்கப்படும் என்று பேசிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது மிரட்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, காலையிலேயே அவரது வீட்டுக்கு சென்று கைது செய்திருக்கிறது காவல்துறை
- இந்த கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது கண்டனத்தில், தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? இல்லை சாத்தானின் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பி, காவல்துறை இதுபோன்ற கைதுகளை செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கமுடியாமல் பின்வாங்கிய நிலையில், அவர் விட்ட இடத்தை பிடிக்க நடிகர் தனுஷ் முயற்சித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த மாதம் தனுஷ், தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கென புதிய கொடியை அறிமுகப்படுத்திய நிலையில், ரஜினியின் ஆதரவுடன் அரசியல் களத்தில் இறங்க தனுஷ் தரப்பு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பொது கலந்தாய்வு ஆன்லைன் முறையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்க விவகாரம், மேகதாது அணை பிரச்னை, சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
- காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு அணைக் கட்ட முயற்சித்து வருவது தொடர்பாக விவாதிக்கக்கோரி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீங்கு வராத நிலையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அதற்கு ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறியிருக்கிறது. உடலில் பயங்கர காயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதே தெருநாய் 32 பேரை கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் அதிமுகவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர். அவர்கள் சென்னை வந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் மொட்டை அடித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
- முதல்வர் விஜய் தலைமையில் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தின்போது பழனி கோயிலுக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
- திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ‘நம்ம பாக்கியராஜ்’ அணி வெற்றி. தலைவராக இயக்குநர் சேரனும், துணைத் தலைவராக இயக்குநர் சமுத்திர கனியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சட்டமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் நிழல் வேளாண் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
- முதல்வர் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு அமைச்சரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர் இப்படி பேசுவதாகவும், எல்லோருக்கும் எலும்புகள் உண்டு என்பதை நினைவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
