கொரோனா ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த இனி கால நீட்டிப்பு தேவைப்படாது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 19 ஆயிரத்து  816 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணை 2000 ரூபாய், மற்றும் மாவட்ட திமுக சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.




கரூர் படிக்கட்டுத்துறை, காந்திநகர், வேலுச்சாமிபுரம், வெங்கமேடு, அரசு காலனி, ஆச்சிமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் நிவாரண உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர்
செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 




 டாஸ்மார்க் மதுபான கடைகள் தமிழகத்தில் 27 மாவட்டங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் அதில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் விற்பனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். 


தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நிலையிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக தலா 4000 ரூபாய் 8300 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.




அதை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் சொல்லாத பல திட்டங்களை செய்து வரும் தமிழக முதல்வர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 844 கோடி மதிப்பில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.


தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு 500 என இருந்தது தற்போது 100 ஆக குறைந்துள்ளது. இது முழுமையாக குறைந்து ஜீரோ நிலையை அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. 50 சதவீத பணியாளர்களை கொண்டு தொழில் சாலைகள் நடந்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




அதைத் தொடர்ந்து பேசுகையில் டாஸ்மார்க் மதுபான கடைகள் தமிழகத்தில் 27 மாவட்டங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் அதில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் விற்பனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


அப்போது செய்தியாளர் கேட்ட மின் கட்டணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‛‛தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கி இருப்பதால் மின்கட்டண செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்க வாய்ப்பு இல்லை,’’ என செய்தியாளரிடம் தெரிவித்தார்.




அதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ,வருவாய் கோட்டாட்சியர், கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.