முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத செல்லும் தேர்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று தேர்வுக்கூட அனுமதிசீட்டு அல்லது அழைப்பு கடிதத்தை காண்பித்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி/டி.என்.பி.எஸ்.ஸி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு மற்றும் காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இருப்பதால் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண