விழுப்புரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம்.
நவராத்திரி விழாவின் இறுதியாக ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை வந்ததால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையொட்டி, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலும் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலைக்காக வந்து தங்கியிருப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை வந்து தங்கியுள்ள மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர். போக்குவரத்து துறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் ஒரு சில ஊர்களுக்கு பேருந்துகள் முறையாகவும், அதிக எண்ணிக்கையிலும் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பண்டிகை கால தேவையையொட்டி, தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, வேலூருக்கு ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் வாடகைக்கு எடுத்து இயக்குகிறது. இதேபோல் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இனி தொடர்ந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.