Breaking LIVE: கனமழை பாதிப்பு - மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் நிலவரம் குறித்த முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை காலைக்குள் பாதிப்பு சீராகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். 4000 பணியாளர்களுடன் இரவு முழுவதும் மின்பாதிப்புள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது/
தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக அறிவித்த சென்னை வானிலை மையம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ளா நிலையில், தமிழ்நாடு, ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிலத்திற்குள் நுழைந்து பின்னர் வலுவிழந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளது. இன்றைய மழைப்பொழிவு ஆந்திராவில் அதிகமாக இருக்கும்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை ஓய்ந்து பலத்த காற்று வீசிகிறது
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 75 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
Background
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கொட்டி வருகிறது. நேற்று இரவு மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. புறநகரான எண்ணூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழையினாலே கடுமையான அவதிக்குள்ளாகியுள்ள சென்னைவாசிகள் இந்த மழையினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையின் பெரும்பாலான சாலைகள், முக்கிய சந்திப்புகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்காக உதவி எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து மட்டும் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 12 மணிக்குள் சுமார் 300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவிகோரி வந்துள்ளது.
உதவி கோரி அழைப்பு விடுத்தவர்கள் பலரும் தாங்கள் மழைநீரினால் சூழப்பட்டிருப்பதாகவும், தங்களது பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். காலை வரை சுமார் 2.5 லட்சம் மக்களுக்கு போதியளவிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -