TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
Tamil Nadu Power Shutdown Details (19-2-2026): சில பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நிறுத்தம் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பணி நிறுத்தம், பராமரிப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (19.02.2026) மாநிலம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.
குறிப்பாக ஒரு பகுதியில் 14 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. எங்கே? காணலாம்.
பல்லடம் துணை மின் நிலையம்
தாராபுரம்
தாராபுரம்
நாரணாபுரம் - செகாம்பாளையம், வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நிறுத்தம் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம் துணை மின் நிலையம்
திருக்குவளை
திருக்குவளை, ஏழுக்குடி, மணலி
குத்தாலம்
குத்தாலம், ஆரயபுரம்
கடலங்குடி, குத்தாலம்
நாளை (பிப். 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும்.
திண்டுக்கல் மேற்கு
விட்டனாலிகன்பட்டி பகுதி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
மின்சாரம் இல்லாத நேரங்களைக் கணக்கிட்டு, மக்கள் தேவையான அளவு தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல வெளியில் செல்ல வேண்டிய பணி ஏதேனும் இருந்தால், அதை மின் தடை நாளில் திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேபோல போனில் சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமையலையும் முன்கூட்டியோ அல்லது அரைப்பது தேவைப்படாத ஒன்றாகவே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தினந்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
























