Tamilnadu Power Cut: சென்னை டூ கோவை.. நாளை(26-05-26) தமிழ்நாட்டில் பவர் கட் ஏற்படும் இடங்கள்.. லிஸ்ட் இதோ
Tamil Nadu Power Shutdown (26-05-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 26 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, சேலம்,கோவை, ஈரோடு, கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
சென்னை
தி.நகர்: பஜூல்லா சாலை, சாரி தெரு. பார்த்தசாரதிபுரம். உண்ணாமலைஅம்மாள் தெரு, ஹபீபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர ஐயர் தெரு, ராஜபிள்ளை தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை. கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அஜீஸ் நகர், அக்பராபாத். பராங்குசபுரம். சிஆர்பி கார்டன். மங்கேஷ் தெரு. ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு .திலக் தெரு.
தசரதபுரம்: காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை. லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர். வெங்கடேச நகர். அருணாசலம் சாலை.
சாலிகிராமம் : குமரன் காலனி, காந்தி நகர். தேவராஜ் நகர். எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை.
கே.கே. நகர்: பரணி காலனி, காவேரி மருத்துவமனை. சூரியா தெரு. 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம்.
விருகம்பாக்கம்: ஆற்காடு சாலை, என்.எஸ்.கே. லேன், ஷ்யாமளா டவர்.
சின்மயா நகர்: முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை.
திருவேற்காடு: ஆனந்தன் நகர். சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர்.
ஐயப்பன்தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு.ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
கோவை:
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்
ஈரோடு
பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்
கரூர்
உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், அய்யம்பாளையம், சீதாப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு
கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி, சந்தையூர், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
உடுமலைப்பேட்டை
ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர்,ஆர்.சி.பி.உரம்,எஸ்.ஜி.புதூர்,எழுப்பநகரம், சிக்கனுஊத்து, அமண்டகடவு
விழுப்புரம்
மதுரபாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விழுவரெட்டிபாளையம், செய்யத்து விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முற்றம்பட்டு, நீர்குப்பம்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















