நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா - முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அந்த 'புதிய முகங்கள்' யார்?
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.

தவெக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா காலை நடைபெறும் என்றும் ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் 107 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தனர். தவெக ஆட்சி அமைந்தபோது விஜய் முதலமைச்சராக பதவியேற்றபோதே, தவெகவை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஆக இருக்கின்றனர். மேலும், ஐயூஎம்எல் கட்சியில் இருந்து ஒரு எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, தவெகவில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்க செய்யப்படுவதாகவும் புதிய அமைச்சர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பதாகவும் புதிய அமைச்சர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் வெளியானதை தொடர்ந்து, நாளை பதவியேற்பு விழா என்பது உறுதியாகியுள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















