Tamil News Today: தமிழ்நாட்டில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள், லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட் பல்வேறு மோசடிகளும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும், மேலும் வலுவடைய வைக்கிறது.

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுள்ளது. இதனை இந்திய துணைக்கண்டத்தில் பிரச்னையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

Continues below advertisement
20:26 PM (IST)  •  13 Sep 2021

தமிழ்நாட்டில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,608இல் இருந்து 1,580 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு நான்கு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,190 ஆக உயர்ந்துள்ளது.

17:48 PM (IST)  •  13 Sep 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு - இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.  28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபார் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்” என்றார்.

15:39 PM (IST)  •  13 Sep 2021

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  23 நாட்கள் நடைபெற்ற பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

13:15 PM (IST)  •  13 Sep 2021

மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும் - தமிழக அரசு

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

11:06 AM (IST)  •  13 Sep 2021

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு

10:17 AM (IST)  •  13 Sep 2021

நீட் விலக்கு மசோதா: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று முதல்வர் கொண்டு வந்தார். இதையொட்டி, திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. 

10:12 AM (IST)  •  13 Sep 2021

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக இந்து அரநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.   

09:27 AM (IST)  •  13 Sep 2021

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :-


• நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன்  குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகிறது

•  கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது

• கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது

• நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது 

• சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது

• சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது

09:26 AM (IST)  •  13 Sep 2021

நீட் தேர்வு  விவகாரத்தை திமுக அரசியல் ஆதாயத்திற்காக திமுக பயன்படுத்துகிறது

நீட் தேர்வு  விவகாரத்தை திமுக அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக அஇஅதிமுகவும், பிஜேபியும் குற்றம் சாட்டியுள்ளன.

09:25 AM (IST)  •  13 Sep 2021

நேற்று ஒருநாளில் 28,91,021 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

நேற்று ஒரே நாளில் 40,000 முகாம்கள் மூலம் 28,91,021 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர்  மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

09:24 AM (IST)  •  13 Sep 2021

நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

09:23 AM (IST)  •  13 Sep 2021

NEET Exemption Bill : சட்டப்பேரவையில் இன்று நீட்டுக்கு எதிராக தீர்மானம்..!

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரும் சட்டமசோதா இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.