TN Legislative Assembly LIVE: இல்லாதது பொல்லாததை சொல்லாதீங்க; ஆதாரத்தை நான் காட்டவா? - இபிஎஸ் மீது முதலமைச்சர் சாடல்

இன்று கூடிய தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார்.

ஆர்த்தி Last Updated: 09 Oct 2023 01:46 PM
துணிச்சலை பற்றி நீங்க சொல்லாதீங்க - முதல்வர் ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடுத்தோம் அந்த துணிச்சல் எங்களுக்கு இருந்தது ? ஏன் உங்களுக்கு இல்லை ? - எடப்பாடி பழனிசாமி


துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அது என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும் - முதல்வர் ஸ்டாலின்

அறியாமையின் வெளிப்பாடு - துரைமுருகன்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு சமம் ; அறியாமையின் வெளிப்பாடு


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்


பின்னர் ஏன் கூட்டணி வைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் : எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பினார். 


 


அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று பேசக்கூடாது. இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு மரபா? ஆதாரத்தை நான் காட்டாவா? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்தார். 


 


இதற்கு பதிலளித்த இபிஎஸ் “அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதை சொல்லக்கூடாதா? அதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். 


 


பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அனைவரும் அனைத்து உரிமையும் உண்டு. தவறான தகவலை இங்கு பதிவிடக்கூடாது. அதற்குதான் பதிலளித்தேன். இவ்வளவு நேரம் நான் அமைதியாகத்தான் இருந்தேன்” எனத் தெரிவித்தார். 

தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி உரை

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 


”உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு ஏன் அமல்படுத்தவில்லை. கர்நாடகாவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தின் போது காவிரி குறித்து முதல்வர் பேசி இருக்கலாம்” எனத் தெரிவித்தார். 

இரட்டை நிலையை வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - வானதி சீனவாசன்

காவிரி விவகாரம்: தனி தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “ இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்று சொல்ல ஆரம்பித்தால் காலம் எடுக்கும். விவசாயிகள் நலனை முன்னெடுத்து சட்டரீதியான அனைத்து நடவடிக்கையும் எடுத்தது பாஜக அரசு .கர்நாடக மாநில அரசு மீதான எந்த விமர்சனம் இல்லாமல் மத்திய அரசு மீதான விமர்சனத்தை கொண்டு வருவது ஏன்?  இரட்டை நிலையை வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து பாஜகவுக்கு இல்லை. காவிரி விவகாரத்தில் பிட்டு பிட்டாக தீர்வு காண முடியாது” என கூறியுள்ளார். அதானை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது. 

நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் - காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..

காவிரி விவகாரம்: தனி தீர்மானத்தில், “தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளை எடுத்து ஜூலை 21 ஆம் தேதி கபினி அணையிலிருந்து அடுத்த ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்துவிடப்பட்டது. சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்..

காவிரி விவகாரம்: தினி தீர்மானத்தில் முதலமைச்சர் உரையில், “இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மேட்டூர் அணை உழவர்களுக்கு சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021-46.2 லட்சம் நெல் உற்பத்தி, 2022- 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் போதிய அளவு நீர் இருந்த போதிலும் தண்ணீர் திறக்கவில்லை.. தனி தீர்மானத்தில் முதலமைச்சர் உரை..

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அதில், “ 9.19 டிம்எம்சி கிடைக்கவேண்டிய நிலையில் 2.283 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அமைச்சரை சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை”  என குறிப்பிட்டுள்ளார். 

காவிரி உரிமையை காப்பத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் - தனி தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர்..

ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசி வலியுறுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். 

செய்யூர் - ஆலம்பர கோட்டையை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் ராமசந்திரன் திட்டவட்டம்..

செய்யூர் ஆலம்பர கோட்டை ஆசிய வங்கி உதவியுடன் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபுவின் கேள்விக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பதில் அளித்துள்ளார். 

ரூ. 21,729 கோடி மதிப்பில் 123 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் 

முதலமைச்சராக மு.க ஸ்டாட்லிஜ் பொறுப்பேற்ற பின் 123 இடங்களில் ரூ.21,729 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்களத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா என்ற உறுப்பினர் பண்ணாரியின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 

கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

கிராம் பிறப்பகுதிகளின் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பகுதிகளில் கால்நடை மருந்தகமோ, மருத்துவமனையோ அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லால்குடி சட்டமன்ர உறுப்பினர் சவுந்திரப்பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். 

ஓபிஎஸ் அருகே அமர மறுத்த இபிஎஸ்

இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு கேள்வி நேரம் தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் அருகே அமராமல் தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கப்பட்டதை குறிப்பிட்டு பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம். முன்னோடி திட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர் என்று பாராட்டு.

செல்லூர் ராஜு கேள்விக்கு துரைமுருகன் கிண்டல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ : முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்


குடிநீரை நிச்சயம் முதல்வர் தருவார். அந்த அணையில் தண்ணீர் காலியாகாமல் இருக்க ‘தெர்மாகோல்’ போட்டு நாங்கள் மூடி வைத்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன்  கிண்டல்

வினா விடை நேரம்

சட்டப்பேரவையில் வினாவிடை நேரம் தொடங்கியுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். 

10.5% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான பிரச்னை - அன்புமணி ராமதாஸ்..

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 10.5% இட ஒதுக்கீடு என்பது ஒரு சாதிக்கான பிரச்னை இல்லை. இது சமூக நீதிக்கான பிரச்னை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இன்று கூடிய சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி பதில் அளிக்கும் அமைச்சர் துறைமுருகன்..

தமிழ்நாடு குளிர்க்கால சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு  பதிலளித்து வருகிறார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு. காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Background

தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக காவிரி விவகாரம் குறித்து தீமானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. வழக்கமாக ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் கூட வேண்டும். அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அதன்படி சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு  நடைபெறுகிறது.


முதல் நாள் என்பதால் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனை தொடர்ந்து சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  


இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் கேள்வி நேரம் தொடங்கும். இதில் இன்று முக்கியமாக 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல காலமாக தமிழ்நாடு மற்றும் கர்நாட்கா அரசு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக காவிரியில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. ஆனால் காவிரி நதிநீர் பங்கிடு தற்போது அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் க்டசி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் பரிந்துரை செய்தது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


இப்படி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்


“ஏன் நிலவுக்கு ராக்கெட் அனுப்புகிறோம்; பயன்தான் என்ன?” - இளைஞர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் விளக்கம்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.