தூசி தட்டப்படும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வழக்குகள்! - ஆளுநர் விளக்கத்தை அடித்து நொறுக்கிய அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க தாமதமா?

பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.

அதேபோல, கே.சி. வீரமணிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநில அரசு சமர்பிக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை சமர்பிக்காத காரணத்தால் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் மாநில அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஆளுநர் மாளிகையின் இந்த விளக்கம் உண்மைக்கு புறம்பாக உள்ளது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை ஆளுநர் மாளிகை எப்படி தருகிறார்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

ஆளுநரின் விளக்கமும் அமைச்சரின் குற்றச்சாட்டும்:

முதலாவதாக, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் மீது குட்கா வழக்கில் சிபிஐ வழக்கு தொடர அனுமதி வழங்கவில்லை என நேற்று சொல்லியிருந்தோம். 

சிபிஐயிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதா அல்லது அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதா என்பதை பற்றி குறிப்பிடாமல் வழக்கு நிலுவையில் இருப்பதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். இது பொத்தாம் பொதுவான பதில். இதை ஏற்று கொள்ள முடியாது. அவர்கள் (ஆளுநர்) தெளிவாக பதில் தர வேண்டும். சிபிஐ விசாரித்துவிட்டுதான் வழக்கு தொடர அனுமதி கோரியுள்ளது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.

கே.சி. வீரமணி வழக்கை பொறுத்தவரையில், அதிகாரப்பூர்வமான ஆவணங்களை தரவில்லை என ஆளுநர் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ஆவணங்கள, 12.9.22 அன்று முழு அசல் ஆவணங்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, அசல் ஆவணங்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் அவருக்கு நகல் அனுப்ப வேண்டிய தேவையே இல்லை. தெரிந்து கொள்வதற்கு முழு கோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. 

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு தொடர மாநில அரசு கோரிக்கை விடவில்லை என ஆளுநர் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். 15.5.2023 அன்று அனுமதி கேட்டு அரசிடமிருந்து கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, ஆளுநரின் பத்திரிகை செய்தி உண்மைக்கு புறம்பானது" என்றார்.

 

Continues below advertisement