Breaking News Tamil LIVE: ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்
அதிமுக ஆர்ப்பாட்டம்
மா.வீ.விக்ரமவர்மன்Last Updated: 17 Dec 2021 09:25 PM
Background
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...More
உயிரிழந்த மாணவர்கள் - இழப்பீடு வழங்கிய முதலமைச்சர்
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது.
“மாரிதாஸை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்துவிடமுடியுமா..? அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ; அவர் மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள்” என்று சிவி சண்முகம் சவால் விடுத்துள்ளார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதில் வட மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சரின் தூண்டுதல் இருக்கிறது விழுப்புரத்தில் நடைபெற்றும் வரும் போராட்டத்தில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு