Ex-minister Thangamani Raid Live Updates: தங்கமணி வீட்டில் சோதனை - ரூ.2.16 கோடி பறிமுதல்
DVAC Raids Thangamani LIVE Updates: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனூரில் உள்ள ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி மருமகன் தினேஷ்குமார் சமபதிக்கு சொந்தமான இந்த அரிசி ஆலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்பு பேரிகடுகளை அகற்ற வேண்டும் எனவும் தடுப்பிற்க்கு போடப்பட்ட பேரிகார்டில் நிற்க முடியாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரும்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ ப்லைவுட்ஸ் மற்றும் ஜெய ஸ்ரீ பில்ட் ப்ரோ நிறுவனங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷின் உறவினர் ஆனந்த வடிவேல் என்பவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரும்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ ப்லைவுட்ஸ் மற்றும் ஜெய ஸ்ரீ பில்ட் ப்ரோ நிறுவனங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
சென்னை ஷெனாய் நகர் செல்லாம்மாள் தெருவில் வசித்து வரும்
காங்கேயம் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனர் வெங்கடாசலம்
வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷின் உறவினர் ஆனந்த வடிவேல் என்பவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சென்னை பனையூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரையைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
பள்ளிப்பாளையம்
கோவிந்தம்பாளையத்தில் - முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு,
பள்ளிபாளையம் - மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - செந்தில், செந்தில் மனைவி தனலட்சுமி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்
பள்ளிபாளையம் - முன்னாள் நகர்மன்ற தலைவர் (அதிமுக நகர் மன்ற தலைவர் - வெள்ளியங்கிரி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் - டி.கே.சுப்பரமணி,
உதவியாளர் - சேகர்
தங்கமணியின் மகள் வழி சம்மந்தி - சிவா
நாமக்கல்
நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி & கோ, இல்லம் , அலுவலகம்
அரசு ஒப்பந்ததாரர் PST கட்டுமான நிறுவனர் தென்னரசு , வீடு மற்றும் அலுவலகம்
சென்னை ஷெனாய் நகர் செல்லாம்மாள் தெருவில் வசித்து வரும் காங்கேயம் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
அரும்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகள் லதா ஸ்ரீ , மருமகன் தினேஷ் ஆகியோருக்கு சொந்தமான ஸ்ரீ ப்லைவுட்ஸ் மற்றும் ஜெய ஸ்ரீ பில்ட் ப்ரோ நிறுவனங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
பள்ளிபாளையம்
கோவிந்தம்பாளையத்தில் - முன்னாள் அமைசார் தங்கமணி வீடு,
பள்ளிபாளையம் - மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - செந்தில், செந்தில் மனைவி தனலட்சுமி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்
பள்ளிபாளையம் - முன்னாள் நகர்மன்ற தலைவர் (அதிமுக நகர் மன்ற தலைவர் - வெள்ளியங்கிரி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் - டி.கே.சுப்பரமணி,
உதவியாளர் - சேகர்
தங்கமணியின் மகள் வழி சம்மந்தி - சிவா
நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி & கோ, இல்லம் , அலுவலகம்
அரசு ஒப்பந்ததாரர் PST கட்டுமான நிறுவனர் தென்னரசு , வீடு மற்றும் அலுவலகம்
பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரையைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.
கே.பி பார்க் குடியிருப்பு விவகாரம் முறைகேடு தொடர்பான நிறுவனங்களில் ( PST constructions and Tharun Constructions) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத்துறையில் 26ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி எனப்படும் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது.சிஏஜி அறிக்கையில் பல்வேறு ஊழல் நிகழ்ந்ததாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 13,176கோடி நட்டம் என சிஏஜி குறிப்பிட்டுள்ளதே தவிர ஊழல் என்று சொல்லவில்லை. ஆனால் ஊழல் நடந்ததாக ஊடகங்கள் சில செய்திகள் வெளியிடுகின்றன" என்று தெரிவித்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் சற்று பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு நடந்துவரும் நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை. அவர் தன்னை நிராபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுவதால், அவர் குற்றம் படிந்தவர் என அர்த்தமில்லை, அவர் நிரபராதி என நிரூபித்தால் விட்டு விடப்போகிறார் .
அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு நடந்துவரும் நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை. அவர் தன்னை நிராபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுவதால், அவர் குற்றம் படிந்தவர் என அர்த்தமில்லை, அவர் நிரபராதி என நிரூபித்தால் விட்டு விடப்போகிறார் .
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
பி.தங்கமணி மற்றும் சேலத்தில் உள்ள அவரது மகன் தரணிதரன், உறவினர்கள், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலத்தில் தங்கமணி மகன் தரணிதரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
2016-20 வரையிலான பணிக்காலத்தில், வழக்கின் முதல் குற்றவாளியான பி.தங்கமணி, இரண்டாவது குற்றவாளியான அவரின் மகன், மூன்றாவது குற்றவாளியான அவரின் மனைவி மூலம் 7 கோடி மதிப்பிலான சொத்து பெறப்பட்டுள்ளது. ஆனால், அதே காலத்தில் இந்த மூவரின் சேமிப்புத் தொகை 2 கோடியாக மட்டுமே உள்ளது (2,60.08,282)
2016-20 வரையிலான பணிக்காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.4 கோடி (4,85,72,019) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக மதிப்படப்படுகிறது.
13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and uls 13(2) thw 13(1)(b) of the Prevention of Corruption Act 1968 as amendod in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
இதனையடுத்து, வழக்கு தொடர்பாக பி.தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் தேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் பி,தங்கமணி, தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலானபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது.
Background
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2013 முதல் 2018 வரை தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் மின்சாரத்துறையில் 26ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த தங்கமணி(thangamani), மின்சார வாரியம் என்பது சேவைத்துறை. அது வருமானம் ஈட்டித்தரும் துறை கிடையாது. மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் நிதி உதவி பெற்று மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம் என்று தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -