TN Rain Alert: சில்லென மாறப்போகும் தமிழ்நாடு.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை..!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24.06.2023 மற்றும் 25.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.06.2023 முதல் 28.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-the-meteorological-department-moderate-rain-will-continue-in-tamil-nadu-for-the-next-5-days-due-to-the-change-in-the-speed-of-the-westerly-winds-124951/amp
Minister M. Subramanian: நேரு அரங்கத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்? விமர்சனங்களுக்கு பதில் கேள்வி கேட்ட அமைச்சர் மா.சு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்கட்சியினர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் தான் அதன் தீவிரம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் பண்ண முடியுமா என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-m-subramanian-has-criticized-that-the-seriousness-of-it-will-be-known-only-if-the-opposition-parties-perform-heart-surgery-124925/amp
Medical Colleges: மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து: பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்துக- அன்புமணி
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து உள்ளதால், பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/education/risk-to-accreditation-of-medical-colleges-speed-up-professors-promotion-process-anbumani-124915/amp
TN Police: 'சும்மா சும்மா குண்டர் சட்டம் பயன்படுத்த கூடாது..' டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்..!
Latest Gold Silver Rate 24 June 2023: மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.. சவரன் இவ்ளோ விலையா? இன்றைய நிலவரம்..
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.43,640 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.5,455 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5916-ஆகவும், ஒரு சவரன் ரூ. 47,328 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/latest-gold-silver-rate-today-chennai-24-june-2023-know-updated-gold-price-in-your-city-coimbatore-trichy-vellore-124902/amp