TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
நடப்பாண்டுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் 12 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
- உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராம சபை கூட்டங்கள் எங்கு நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா; மதுரை மாவட்டத்துக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் (ஏப்.04) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் படிக்க
- 12 மணி நேர சட்டமசோதா நிறுத்திவைப்பு: தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக நிறுத்தம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 12 மணி நேர சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதனை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 9 தொழிற்சங்கங்கள் வரும் மே 12-ந் தேதி வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. அரசின் முடிவால் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
பள்ளி மாணவர்களுக்கு எமிஸ் ஐ.டி. கட்டாயம்; விதிமுறைகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு EMIS ID வழங்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் EMIS ID அடிப்படையிலேயே சேகரிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக புதிய வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க