வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர்  ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் படிக்க



  • Gold Silver Rate February 05, 2024: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,560 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,320ஆகவும் விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.76.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700 க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க



  • Saidai Duraisamy: சைதை துரைசாமியின் மகன் மாயம் - ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார் - நடந்தது என்ன?


சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.  அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில்  சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இதில் காரை இயக்கிய ஓட்டுநர் டென்ஜின் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க



  • அரசு பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வருகிறது புது சட்டம்


யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.  இதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று (மக்களவையில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!


செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு, அமைச்சர்கள் தா மோ .அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளைத் தொடங்கி வைத்தனர். மேலும் படிக்க