தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.


இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென்காசி, மதுரை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூரில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அந்த வகையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


 அதேபோல் நாளை தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, ,திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.