தமிழக சட்டமன்றம் - இடைக்கால பட்ஜெட்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  எனவே தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.  இந்த நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் முடிவிற்கு பிறகே புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 

இடைக்கால பட்ஜெட்- அப்பாவு அறிவிப்பு

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 17ம் தேதி தமிழ்நாடு அரசிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.  எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கறினார். .

சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

இந்த நிலையில் சட்ட மன்ற தேர்தலையொட்டி பல்வேறு சலுகைகளை திமுக அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் அறிவிப்புகளாக மகளிர் உரிமை தொகை, இலவச வீடு, மின் கட்டண சலுகை, முதியோர் உதவி தொகை, பட்டா வழங்குவது, மாணவர்களுக்கான சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 17ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.