மேலும் அறிய
TN Budget 2026: தமிழக பட்ஜெட்.! மகளிர்களுக்கான அசத்தல் திட்டங்கள்- பட்டியலிட்ட தங்கம் தென்னரசு
Tamil Nadu Interim Budget 2026: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டில் மகளிர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது.

TN Interim Budget 2026
Source : social media
நெருங்கும் தேர்தல்- இடைக்கால பட்ஜெட் தாக்கல்
சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் பணியாற்றி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக 5ஆண்டு கால ஆட்சியில் நிறைவில் உள்ள நிலையில்,தமிழக சட்டப்பேரைவையில் இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அந்த வகையில் மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். அந்த வகையில்,
- நாடே போற்றும் இந்த மகத்தான திட்டத்தின் பலன்கள் எதிர்வரும் மாதங்களிலும் தடை இன்றி ஒரு கோடியே 31 இலட்சம் பயனாளிகளுக்கும் கிடைத்திடும் வகையில், அண்மையில், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை 3,000 ரூபாயும். கூடவே கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து, மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது.
- அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்ல வழி வகுக்கும் விடியல் பயணம்' திட்டத்தின் மூலம், இதுவரை 881 கோடி முறை பாதுகாப்பான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிப்பை நமது மகளிர் பெறுகிறார்கள்.
- பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்திட உயர்கல்விக்கு உதவிடும் புதுமைப்பெண் திட்டம். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர், அவர்தம் உயர்கல்வி கற்றலை மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.
- 623,529 சுயஉதவிக் குழுக்கள் 1.41,718 கோடி ரூபாயை வங்கிக் கடனுதவியாக பெற்றுப் பயனடைந்திட வழிவகை செய்துள்ளது.
- சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையைப் பெருக்கிட 'வாழ்ந்து காட்டுவோம்' முதலான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- கிராமப்புறப் பகுதிகளில் பயின்று கல்வி பெற்று. பணிவாய்ப்பின் பொருட்டு நகரங்களுக்கு வரும் மங்கையர். பாதுகாப்பாக தங்கிட நவீன வசதிகளுடன் கூடிய 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- கைம்பெண்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்திட, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
- பணிபுரியும் மகளிர் தம் பாலகரைப் பரிவுடன் பராமரிக்க உதவிடும் வகையில், அவர்கள் பணிபுரியும் தொழிற்பூங்காக்களிலேயே குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- நெருக்கடி நேரங்களில் பெண்களின் இடுக்கண் களைந்து உடனடியாக உதவிட 'காவல் உதவி செயலி நடைமுறைக்கு வந்துள்ளது. ஆலயங்களில் ஆண் - பெண் வேற்றுமையைக் களைந்திடும் வகையில், அகிலம் அறிய ஆன்மிகத் துறையில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கும்
- பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 இலட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள். மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
- மகளிரின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும். தன்னிறைவுடன் தனது வாழ்வை வடிவமைத்திடவும் 'இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























