தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜா சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றார். டாவோஸ் நகரத்தில் தமிழ்நாடு அரசு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநில அரசுகளும் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த பொருளாதார மாநாட்டில் அரங்குகள் அமைத்துள்ளது.
ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் துறையில் வலு:
அப்போது, அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறையிலும், எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் மிகவும் வலுவாக உள்ளது. எங்களின் பாரம்பரிய பலம் அப்படியே உள்ளது. ஆனால், நாங்கள் வாழ்க்கை அறிவியலை முறியடிக்க விரும்புகிறோம். உபகரணங்கள் உற்பத்தி துறை பற்றி நிறைய பேசியுள்ளோம். அடிப்படையில் நாங்கள் உயர்தரமான மதிப்புகள் மற்றும் உயர்தர வேலைகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
உற்பத்திகளின் தலைநகரம் தமிழ்நாடு
தமிழ்நாடு உற்பத்திகளின் தலைநகரமாக உள்ளது. ஒரு கடலோர மாநிலமாக தமிழ்நாடு பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், வனவிலங்கு பாதுகாப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் வனப்பரப்பை விரிவுபடுத்துதல் போன்ற ஒருமித்த நோக்கங்களுக்காக பணியாற்றி வருகிறோம்.புதிய தொடக்கத்திற்கான தேடல்
உலகப் பொருளாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில்களுக்கான பல கொள்கை முன்முயற்சிகள் மற்றும் புதிய பாதைக்கான வரைபடங்கள் டாவோஸில் அமைக்கப்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். தமிழ்நாடு புதிய தொடக்கத்தைத் தேடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியிலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கால் தடம் பதிப்பதின் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி, பொருளாதாரம் வளரும் என்று அரசு நம்புகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்த தமிழ் தொழில்முனைவோர்கள் பலரையும் டி.ஆர்.பி.ராஜா சந்தித்தார். அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு சார்பில் அச்சிடப்பட் துண்டுகளை வழங்கினார். அவர்களும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவைச் சந்தித்தனர்.