இந்திய நாட்டில் நயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள், வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கு சதீஷ் தவான் விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளது.


இந்நிலையில் இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


2,376  ஏக்கர் பரப்பளவில் ரூ.950 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் 99% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விண்வெளி மையத்திற்கு அருகில் 1,500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைய உள்ளது. இந்த பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக டிட்கோ தெரிவித்துள்ளது.


ராக்கெட் உதிரிபாகங்களை தயாரிப்பது, மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள் மற்றும் ராக்கெட் தொடர்பான பல்வேறு கட்டமைப்புகள் தொடர்பாக இந்த தொழிற்சாலை மற்றும் உந்துசக்தி பூங்கா உதவிகரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளத்தில் முதலில் சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


குலசேகரப்பட்டினத்திற்கு அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலைமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.