ஒரு மனிதன் இறந்த பிறகும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமாக வாழலாம். உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து அரசும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் ஊக்குவித்து வருகின்றனர். 

Continues below advertisement

உடல் உறுப்பு தானம்:

இதன் எதிரொலி நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அதிகரிப்பு:

அதாவது, உயிரிழந்த பிறகு அவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு உயிரிழந்தவர்களில் எண்ணிக்கையில் 60 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இருந்தது. 

Continues below advertisement

அதுவே, நடப்பாண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் புரிதல் மிகவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம் ( உயிரிழந்தவர்கள்) எண்ணிக்கை எவ்வளவு? என்பதை புள்ளி விவரமாக காணலாம்.

2021 - 60

2022 - 156

2023 - 178

2024 - 268

2025 - 240

2021ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு உயிரிழந்தவர்களின் 60 பேரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதில் இதயம் 52 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. நுரையீரல் 68 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கல்லீரல் 58 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் 100 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

2022ம் ஆண்டு:

2022ம் ஆண்டு தமிழகத்தில் உயிரிழந்தவர்களில் 156 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதில் இதயம் 85 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் 98 பேருக்கும், கல்லீரல் 142 பேருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் 276 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2023ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு உயிரிழந்தவர்களில் 178 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. அதில் 70  இதயங்கள், 110 நுரையீரல்கள், 142 கல்லீரல் மற்றும் 313 சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. 

2024ம் ஆண்டு:

கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் உயிரிழந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அதில் இதயம் 96 பேருக்கும், நுரையீரல் 89 பேருக்கும், கல்லீரல் 210 பேருக்கும்  தானமாக வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் 456 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 

2025ம் ஆண்டு:

நடப்பு 2025ம் ஆண்டு தமிழ்நாட்டில் உயிரிழந்த 240 பேரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதயம் 65 பேருக்கும், நுரையீரல் 86 பேருக்கும், கல்லீரல் 201 பேருக்கும், சிறுநீரகம் 409 பேருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானங்கள் வழங்குவதன் அவசியம் மக்கள் மத்தியில் எந்தளவு அதிகரித்துள்ளது? என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த எண்ணிக்கை மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் இதய தானம் கடந்த 2021ம் ஆண்டு 52 ஆக இருந்தது, கடந்த 2024ம் ஆண்டு 96 ஆக அதிகரித்தது. ஆனால், இது 2025ம் ஆண்டு 65 ஆக குறைந்துள்ளது. 

இதயம்:

மனிதன் உயிர் வாழத் தேவையான இதய தானத்தின் சதவீதம் 2021ம் ஆண்டு 86.67 சதவீதமாக இருந்தது. ஆனால், 2025ம் ஆண்டு 27.08 சதவீதமாக சரிந்துள்ளது. 

2021 - 86.67 சதவீதம்2022 - 54.49 சதவீதம்2023 - 39.933 சதவீதம்2024 - 35.82 சதவீதம்2025 - 27.08 சதவீதம்

நுரையீரல்:

கடந்த 2021ம் ஆண்டு நுரையீரல் தானம் 56.67 சதவீதமாக இருந்தது. கடந்த 2025ம் ஆண்டு 17.91 சதவீதமாக சரிந்துள்ளது. 

2021 - 56.67 சதவீதம்2022 - 31.41 சதவீதம்2023 - 30.90 சதவீதம்2024 - 16.61 சதவீதம்2025 - 17.91 சதவீதம்

கல்லீரல்:

2021ம் ஆண்டு கல்லீரல் தானம் 96.67 சதவீதமாக இருந்தது. இது 2025ம் ஆண்டு 83.75 சதவீதமாக உள்ளது. 

2021 - 96.67 சதவீதம்2022 - 91.03 சதவீதம்2023 - 87.08 சதவீதம்2024 - 78.36 சதவீதம்2025 - 83.75 சதவீதம்

சிறுநீரகம்:

கடந்த 2021ம் ஆண்டு 83.34 சதவீதமாக சிறுநீரக தானம் இருந்தது. இது 2025ம் ஆண்டு 85.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

2021 - 83.34 சதவீதம்2022 - 88.46 சதவீதம்2023 - 87.92 சதவீதம்2024 - 85.08 சதவீதம்2025 - 85.21 சதவீதம்