5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தவிட்டுள்ளது. 


விவரம்



  • வணிக வரித் துறை ஆணையராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக  நியமனம்

  • தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை யில் இருந்த குமரகுருபரன் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக  நியமனம்

  • பள்ளிக்கல்வித்துறை செயலாளராக கார்கலா உஷா இருந்த சுற்றுலாத் துறை செயலாளராக  நியமனம்

  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்

  • தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம்


தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது.  அதிலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு  பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். முன்னதாக  ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர்,. 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.


தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் புதிய ஆட்சியர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



  • தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ்  சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

  • திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம். 

  •  கரூர் ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  • நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  • சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக இருந்த வீரராகவா, தொழிற்கல்வி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வேலூர் மாநாகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராம்நாதபுரம் மாவட்ட கிராமபுற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்



  • குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள், ஊர்க்காவல் படை டிஜிபி ஆக பணியிட மாற்றம்.

  • சென்னை காவலர் பயிற்சி கல்லூரி ஐஜி தமிழ்ச்சந்திரன், TNUSRB உறுப்பினர் செயலாளராக நியமனம்

  • சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக செந்தில்குமார் நியமனம்

  • திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி நியமனம்

  • குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி ஆக ஜோஷி நிர்மல் குமார் நியமனம்

  • சென்னை வடக்கு மண்டல சட்டம், ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம்

  • சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜி ஆக திஷா மிட்டல் நியமனம்

  • சென்னை தலைமையக டிஜஜி ஆக ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி ஆக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ஆக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • காத்திருப்போர் பட்டியலில் இருந்து தீபா சத்யன், தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.