கொளுத்தும் வெயில்- தவிக்கும் மக்கள்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. காலை 7 மணிக்கை சூரியன் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளையே மக்கள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவடங்களில் தற்போது இருக்கும் வெப்பநிலையை விட கூடுதலாக 3 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலவசமாக ஓஆர்எஸ் கரைசல்
வெயிலின் பாதிப்பால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வரும் நிலையில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரச ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வார்டு அமைக்க உத்தரவு
விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்டம் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் (HEAT STOKE) என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது. (Heat Stoke) -யில் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
