பொதுவாக, கொரோனா நோய்த்தொற்று என்பது மரணதண்டனை அல்ல.  பொதுமக்களைப் பொருத்தவரை, வயதானோர், அதுவும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம் உள்ளோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர், இதய நோய்கள் உள்ளோர், மூச்சு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உள்ளோருக்கு ஆபத்து அதிகம். எனினும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டால் பெரும் சேதங்ங்களை தவிர்க்க முடியும். கடந்த கொரானா முதல் அலையின் போது ஏற்பட்ட கொரோனா இறப்புகள் குறித்த தரவுகளும் இதனையே உறுதிப்படுத்தின. ஆனால், கொரோனா இரண்டாவது அலையில் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. 18-50 வயதுக்கு உட்பட்ட, எந்தவித இணை நோய்களும் இல்லாதவர்கள் அதிகளவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகி வருகின்றனர்.      

கடந்த ஏப்ரல் 30 முதல் மே 12-ஆம் தேதி வரையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளில் ( 2718), 23 சதவிகிதம் பேர் (633) எந்தவித  இணை நோய்களும்  இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.        

Date WIth Co Morbidites Without CoMorbidites Total
April 30 114 33 147
May 1 113 40 153
May 2 100 22 122
May 3 110 34 144
May 4 133 34 167
May 5 150 45 195
May 6 150 47 197
May 7 180 61 241
May 8 189 47 236
May 9 174 58 232
May 10 226 67 293
May 11 220 78 298
May 12 226 67 293
TOTAL 2085 633 2718

மே மாத தொடக்கத்தில் இருந்து, தினசரி கொரோனா இறப்புகளில் குறைந்தது 25 சதவிகித (சராசரி) இறப்புகள் எந்தவித இணை நோய்கள் இல்லாதவர்களிடத்தில் காணப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி-மே மாத இடைவெளியில், மற்ற வயது  பிரிவினரை விட 30- 40 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே ஒன்றாம் தேதியில் இருந்து தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், மாநில அரசுகளுக்கிடையே போதிய தடுப்பூசி விநியோகம் இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் தடுப்பூசி போடப்படும் விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவில், இதுநாள் வரையில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட 34 லட்ச பயனாளிகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் 7 கோடிக்கும் அதிகமானோர் Cowin தளத்தில் தடுப்பூசிக்காக பதிவு செய்திருக்கின்றனர். எனவே, பொது மக்களிடம் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்திருப்பதும், அதன் விநியோகம் மந்தநிலையில் உள்ளதும் தெளிவாக விளங்குகிறது.   


   

தமிழகத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டகளில், வெறும் 22, 326 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி டோஸ் நிர்வகிக்கப்படுள்ளது. இது, மகாராஷ்டிரா (6,25,507), குஜராத் (3,86,743), டெல்லி (4,71,789), ராஜஸ்தான் (5,49,097), உத்தர பிரேதேசம் (2,65,669) போன்ற மாநிலங்களை விட மிகவும் குறைவாகும். 

தடுப்பூசி கையிருப்பு: 

ஒட்டு மொத்தமாக ( மத்திய அரசு கொள்முதல் + மாநில அரசு கொள்முதல் + தனியார் மருத்துவமனைகள் கொள்முதல்) 97 லட்சத்திற்கும் அதிகமான (97.61) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,53,391 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,89,619 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின் வசம் கையிருப்பில் உள்ளன. அதாவது, அடுத்த இரண்டு வாரங்களுக்கு தேவையான தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசிடம் உள்ளது. எனவே, தடுப்பூசி கொள்முதலை அதிகப்படுத்தி  18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை நிர்வகிக்க மத்திய/மாநில அரசுகள்  முன்வரவேண்டும்.