விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகர் அறம் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது விரிவாக பேசிய அவர், "நாடு முழுவதும் எண்ணிலடங்காத மக்கள் தங்கள் உயிரை சுதந்திரத்திற்காக கொடுத்துள்ளனர்.


தமிழ் மண் பல உயிர்களை சுதந்திரத்திற்கு விலையாக கொடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்போதை மெட்ராஸ் மாகாணத்தில் 6000 இளைஞர்கள் நேதாஜியின் படையில் இணைந்து பிரிட்டிஷுக்கு எதிராக போர் புரிந்தனர்.


தமிழக ஆளுநர் என்ன பேசினார்?


சுதந்திரத்திற்காக ரத்தத்தையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் கனவு சுதந்திரம், அதனை நாம் மறந்து விட்டோம். தங்களின் உயிரைக் கொடுத்து நம் சுதந்திரத்திற்காக தன் உயிரை கொடுத்தவர்களின் பேரை வரலாற்றில் இருந்து நீக்கிவிட்டால் அது அவர்களின் மரியாதை இழக்கும் செயலாகும். நன்றியுடன் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.


10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை பிரிட்டிஷார் அடிமையாக காலணி ஆத்திக்கத்திற்காக பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் வேலை செய்வதற்காக அழைத்துச் சென்று விற்பனை செய்தனர். எப்படி அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துச் சென்றது போல அழைத்துச் சென்றனர். அப்படி எடுத்துச் சென்றவர்கள் மிகக் கொடுமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.


இன்று பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை பார்க்கும்போது இவை குறிப்பிடப்படவில்லை, இவை ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. பல இடங்களில் பரவிக் கிடக்கும் நம் மக்கள் எப்படி சென்றார்கள் அவர்கள் வர்த்தக அடிமைகளாக வர்த்தகம் செய்யப்பட்டனர் என்பதை குறிப்பிடப்படவில்லை.


இது நமது பாடத்திட்டத்தில் இல்லை. பலர் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் சேர்ந்தனர். பல தியாகங்கள் செய்யப்பட்டுள்ளது. நாகலாந்தில், ஒரு பழங்குடி கிராமம் கூட ரத்தம் சிந்தாமல் பிரிட்டிஷாரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.


நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இவற்றை தெரியாமல் நாம் சுதந்திரத்தின் அருமை தெரிந்து கொள்ள முடியாது. சுதந்திரம் நட்புறவாக வழங்கப்பட்டது என நமக்கு சொல்லப்பட்டுள்ளது.


"சிந்தனை திறன் குறையும்"


பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டமாக கொண்டுவரப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியா இண்டிபெண்டன்ஸ் ஆக்ட் 1947 என இயற்றப்பட்டது. சுதந்திரத்திற்காக நாம் கொடுத்த இழப்புகளை நினைத்து பார்க்க வேண்டும்.


2004இல் சுனாமி வந்த பொழுது மேலை நாடுகள் நமக்கு உதவி செய்ய வந்தபோது நாம் அதனை மறுத்து மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய சொன்னோம். நாமும் மற்ற நாடுகளுக்கு உதவி செய்தோம். நான் அப்போது பிரான்ஸில் இருந்தேன் அங்கிருந்து ஒரு வயதான முதியவர் என்னை கைகுலுக்கி இந்தியராக இருப்பதற்கு பெருமைப்பட வேண்டும் என்று கூறினார்.


அதன் பிறகு தொடர்ச்சியாக சரிவு. இன்று இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றோம். பெரிய வளர்ச்சி அடைய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. எங்கிருந்தோம் என்று தெரியாத நிலையில் இருந்து இன்று உலகில் முக்கிய நிகழ்வுகள் இந்தியாவின் பங்கு உள்ளது.


இந்த நடவடிக்கை கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளது. நம் நமது பாரம்பரியத்தை மீட்டு உள்ளோம். 75வது சுதந்திர தினத்தில் அனைத்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களையும் அரசு கவுரவித்தது. 2021ல் நான் ஆளுநராக வந்த போது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியல் என்னிடம் கொடுத்தனர், அதில் வெறும் 40க்கும் குறைவான பெயர்களே இருந்தன.


நான் அதை நம்பவில்லை, தெளிவாக நம் கணக்கெடுக்கும் போது ஆயிரம் ஆயிரம் பெயர்கள் கிடைத்தனர். நாம் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் அவர்கள் எதற்காக இறந்தார்கள் என்பதை யோசிக்கணும். அவர்கள் நம் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, ஒரு கனவிற்காகவும் பாடுபட்டனர். இந்த நாட்டை உலகின் தலைமை நாடாக முன்னெடுக்க வேண்டும் என்று கனவோடு அவர்கள் போராடினர்.


இலக்கை நோக்கி இந்த நாடு பயணிக்க வேண்டும். உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளது, மிகப் பெரிதாக வளருங்கள் சிறிதாக எண்ண வேண்டாம், வெற்று வார்த்தைகளால் உங்களை உற்சாகப்படுத்தவில்லை, நான் இவற்றில் வாழ்ந்துள்ளேன். பல்வேறு சூழ்நிலைகளில் அனுபவப்பட்டு வந்துள்ளேன். என் வழியில் பிரச்சனைகள் வர விட்டதில்லை. நீங்கள் நெருப்பின் உடைய பயணிக்க வேண்டும். தங்கம் நெருப்பில் புகுந்து வரவில்லை என்றால் ஜொலிக்காது..


உங்கள் கனவு பெரிதாக இருக்க வேண்டிய நேரம் இது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருந்தோம். 300- 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. இன்று 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றோம்.


இந்த நிறுவனங்கள் உங்களைப் போன்ற இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்ச்சியடைந்தாக் உங்கள் வீடு வளரும், உங்கள் ஊர் வளர்ச்சியடையும்,  உங்கள் இந்த நாடு வளர்ச்சியடையும்.


இந்த வளர்ச்சி பெரிய நிறுவனங்களால் பெரிய தொழிற்சாலைகள் ஆகவில்லை, சிறு சிறு மாணவர்களாலும் பெண்களால் எளிய மனிதர்களாலும் நிகழ்ந்தது. கனவு காணுங்கள், சாத்தியப்படுத்துங்கள், இது தான் நேதாஜிக்கும் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதையாக இருக்கும். 


எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாக பணியாற்றுங்கள். இதுதான் நேதாஜி நமக்கு கற்பித்தார். தனது வாழ்க்கையை நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்தார். அவர் விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். திரைகளில் ( screen) அதிகமாக நேரம் செலவழிப்பவர்களுக்கு சிந்தனை திறன் குறையும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.