யாருக்கு எந்த பொறுப்பு? - 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிப் போட்ட தமிழ்நாடு அரசு; முழு விபரம்
6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில்குமாரி சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக நியமனம்.

செந்தில் குமாரி, அஷோக் குமார் உள்ளிட்ட 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்கு மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்களை நியமித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்ததை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தவிட்டுள்ளது. அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில்குமாரி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஷியாமளா தேவி ஐபிஎஸ் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.அசோக், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமனம்
திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூருக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செந்தில்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவீன், பெரம்பலூர் எஸ்பியாக லலித் குமார், திருப்பத்தூர் எஸ்பியாக அக்சய் அனில் வாக்ரே ஆகியோரை நியமித்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















