மேலும் அறிய

Tasmac Shop : மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

Tasmac shops employees : தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அடுத்து என்ன செய்வது என் தவித்து வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட விஜய்

தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுபானம் விற்பனை அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் பல கோடி ரூபாய் ஒரே நாளில் வசூலாகி வரும் நிலையில், குற்றச்ச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. முன்பெல்லாம் பயந்து, பயந்து மறைந்து குடித்த காலம் தற்போது மலையேறிவிட்டது. மது குடிப்பதையே தற்போது பேஷனாகிவிட்டது. மது குடிக்காதவர்களை நண்பர்கள் கூட்டத்தில் இருந்து கழட்டி விடும் நிலையும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி சிறுவர்கள் கூட மது போதைக்கு அடிமையாகி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதை தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

717 டாஸ்மாக் கடைகள் மூடல்

அந்த வகையில் தமிழகத்தில் தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, பேருந்து நிலையம்,  வழிபாட்டு தளங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகளை மூடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 717 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த ஊழியர்களுக்கு வேலை இழக்கும் நிலையானது உருவானது இந்த நிலையில் மாற்றுப்பணி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் வேலை இழப்பு

இந்த நிலையில், மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக்) தமிழக அரசாணையின் அடிப்படையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரியும் சில்லறை விற்பனை பணியாளர்களை பணி நியமனம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,  தமிழக அரசு கல்வி நிலையங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 கடைகளில் கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதில் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரப்பிட செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி

மேலும், மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரப்ப செய்திட வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

 

Advertisement

தலைப்பு செய்திகள்

வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
Kollur Mookambika Temple : ’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
Judgement : ’வெறும் 730 ரூபாய்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு’ நடந்தது என்ன?
’திமுக நிர்வாகிக்கு 25 ஆண்டுகள் கழித்து சிறை’ பின்னணி என்ன..?
DMK ELECTION RESULT: திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்
திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
’’கர்நாடகா சென்ற விஜய் காவிரி நீரை கொண்டு வருவாரா? பொய்க்கால் குதிரை அரசு’’ அடித்து ஆடும் திமுக, அதிமுக!
’’கர்நாடகா சென்ற விஜய் காவிரி நீரை கொண்டு வருவாரா? பொய்க்கால் குதிரை அரசு’’ அடித்து ஆடும் திமுக, அதிமுக!
Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!
Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!
DMK:
"ஸ்டாலின் மட்டுமில்லை, திமுக தோற்கவும் சேகர் பாபு காரணம்" அறிக்கையால் அதிர்ந்த அறிவாலயம்
Judgement : ’வெறும் 730 ரூபாய்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு’ நடந்தது என்ன?
’திமுக நிர்வாகிக்கு 25 ஆண்டுகள் கழித்து சிறை’ பின்னணி என்ன..?
Arun IPS : ‘திமுக மாஜிக்களுக்கு குறி’ அருணை வைத்தே ஆப்பு வைக்கும் முதல்வர் விஜய்..!
‘திமுக மாஜிக்களுக்கு குறி’ ஊழல் பட்டியலை எடுக்கும் DVAC..!
Kollur Mookambika Temple : ’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
Hyundai Hatchback: SUV இம்பேக்டில் ஹுண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் - புது டிசைன், கேபின் அப்டேட்கள் - விலை எப்படி?
SUV இம்பேக்டில் ஹுண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் - புது டிசைன், கேபின் அப்டேட்கள் - விலை எப்படி?
Embed widget