வீடு கட்டும் பெற வேண்டிய ஒப்புதல் சான்றிதழ்கள்

வீடு கட்ட திட்டமிடும் முன்பு பல்வேறு அனுமதிகளை பெற வேண்டியது கட்டாயமாகும், அந்த வகையில், கட்டிடக் கட்டுமானத்திற்கான அனுமதியை பெற  நிலத்தின் தலைப்பு, நில அனுமதி, மண்டல அனுமதி, கட்டிட ஒப்புதல்,நிறைவுச் சான்றிதழ், சேவைகள் மற்றும் பயன்பாட்டு நிறுவல், ஆக்கிரமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஒப்புதல் பெற வேண்டும். எனவே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். எனவே கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்திருக்கிறது. இந்த நிலையில் திட்ட, கட்டிட அனுமதிகளை உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

 கட்டிட ஒப்புதல் - தமிழக அரசு அதிரடி

இது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திட்ட மற்றும் கட்டிட அனுமதிகள் வழங்கப்டுவதை உறுதி செய்யப்பட  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டு, உயர் அதிகாரிகளின்  கண்காணிப்புடன் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும். இந்த நடைமுறையில்  பொதுமக்களுக்கு எவ்வித சிரம மும் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கட்டிட அனுமதிக்காக தரப்பட்ட விண்ணப்பங்கள், பெறப்பட்ட தேதியிலிருந்து காலவரிசைப்படி செய்யலாக்கப்பட வேண்டும். முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை என்ற முறை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கட்டிடம் கட்டுவதற்கு இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், களஆய்வு முடிந்த பிறகு 2 நாட்களுக்குள் அந்த அறிக்கையை யுடிஐஎஸ் இணையதளத்தில்  பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 5 நாட்களுக்குள் சரிபார்க்க வேண்டும்.விண்ணப்பித்ததில் இருந்து 12 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணி முடிந்திருக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

கட்டிட ஒப்புதல்- 24 நாட்கள் கெடு

பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், இணைய வழி சமர்ப்பிப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அச்சிடப்பட்ட ஆவணங்களின் நகல்களை கட்டிடம் கட்டும் விண்ணப்பித்தவர்களிடம் கேட்கக் கூடாது. ஆவணங்கள் சரியாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அடுத்தகட்ட நகர்வுக்கு சென்றுவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்ட விவரங்களை இணையவழி மூலம் விண்ணப்பதாரர் சமர்ப்பிப்பதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப் பட வேண்டும்.

ஆவணங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதும், இணையதள வாயிலாகக் கட்டணக் கணக்கீடு மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும், அனைத்துச் செல்லத்தக்க ஆவணங்களும் சமர்ப் பிக்கப்பட்ட 3 வேலை நாட்க ளுக்குள், தகுதிவாய்ந்த அதிகாரி. திட்ட அனுமதி விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதாவது, விண்ணப்பித்த 24 நாட்களில் இது கிடைத்துவிட வேண்டும்.

நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது

மேலும்,மேலும், டி.டி.சி.பி. அல்லது சி.எம்.டி.ஏ.வினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கான கட்டிட அனுமதியை 7 நாட்க ளுக்குள் வழங்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் பிற்காலத்தில் தவறானவை எனத் தெரியவரும் பட்சத்தில், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர், அரசின் அறிவுறுத்தல்கள் எதையேனும் மீறி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விண்ணப்பத்தினர் அல்லது பதிவு பெற்ற பொறியாளர்கள், கட்டிடக்கலைஞர்களை நேரடியாகத் தொடர்புகொண்டால், மிகத் தீவிரமான விஷயமாகக் கருதப்படும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.