தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் - யார் யாருக்கு எந்தெந்த துறை?இதோ முழு விபரம்
தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் சவானை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்க்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை ஆணையராக ஹர் சஹாய் மீனா, பால்வளத்துறை ஆணையராக அஜித் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி, திண்டுக்கலுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்
தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர், கடலூர், தஞ்சை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்
கரூர் மாநகராட்சி ஆணையராக பிருத்விராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக தீபானா விஸ்வேஸ்வரி, கடலூர் மாநகராட்சி ஆணையராக கிஷன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சரவணனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















