ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழ்நாட்டின் வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு ரூ. 2000 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு மாநிலத்திற்கு, ரூ. 944.80 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், மத்திய ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதி வழங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.