Electricity Bill Hike:  தமிழ்நாடு மிவாரியம் அமல்படுத்தியுள்ள  மின்சாரக் கண்டன உயர்வு குறித்து, எம்.பி. சு.வெங்கடேசன்  வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு என டிவீட் செய்துள்ளார். 


தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், 


நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாய் மின் கட்டணம் உயர்வதாகவும், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம் உயர்த்த பரிசீலிக்கப்படுவதாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


மேலும், 42 விழுக்காடு வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்தக் கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.






இருப்பினும் இந்த கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் நாம் தள்ளப்பட ஒன்றிய அரசு தான் காரணம் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். இது குறித்து அவரது டிவீட்டில், 


1... 2... 28 முறை அரசு மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசின் மானியங்கள் கிடைக்காது என கண்டிப்போடு 28 முறை கடிதங்கள் வந்தன என  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என  எகானாமிக் டைம்ஸ் செய்தியில் - ஜூலை 18, 2022 வெளியான செய்தியினை குறிப்பிட்டுள்ளார். வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு! மாநிலங்களின் ஒன்றுபட்ட குரல் தேவை என குறிப்பிட்டுள்ளார். 


மேலும், மின் கட்டண உயர்வினைக் கண்டித்தும், திரும்பப் பெறக்கோரியும்,  எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான் பாஜக கண்டனப் போராட்டங்களை அறிவித்துள்ளன. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண