தமிழ்நாட்டில் ஆக்ரோஷமான இந்துத்துவா உருவெடுப்பது  என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில், தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பே, மதம் என்ற ஒன்றை ஜனநாயகப்படுத்திவிட்டது. மத அடிப்படைவாதம் தமிழ்நாட்டில் என்றும் நிலைக்காது. மதம் என்பது தமிழ்நாட்டில் அவரவர் உரிமை. என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


மேலும், மு.க. ஸ்டாலின்ம் தலைமையிலான அரசு, உலகம் முழுவதும் இருந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் அதிகரித்து வரும் வகுப்புவாத பதட்டங்கள் காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தொழில்களை மாற்ற விரும்பும் முதலாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் செயல்படும் அரசு இது என்றும் கூறியுள்ளார்.


ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முதலீடுகள், பொருளாதராம், கர்நாடக மாநிலத்தில் நடக்கும் வகுப்புவாதம் போன்றவைகள் குறித்து பேசினார். அவற்றின் சாராம்சம், இத்தொகுப்பு.


சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரியை தவறான முறையில் அமல்படுத்துவது மற்றும் நிறுவனங்கள் மீதான மத்திய அரசின்  அதிகரிக்கும் கட்டுப்பாடு ஆகியவை நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


தமிழகத்தில் முதலீடுகள் 53 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நிதி முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை கவரும் வகையில், மாநில அரசு அடுத்த 6 மாதங்களில் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. சமீபத்தில் மாநிலத்தில் சார்பில், ரூ.6.1 பில்லியன் மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்தில் 14,000 வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.


கடந்த காலங்களில் கூட்டாட்சியை பின்பற்றுவதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பேசிய அமைச்சர், ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பான கவலைகளை சுட்டிக்காட்டினார்.


அணைகள், துறைமுகங்கள், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. அதன் மூலம் எந்த பலனைப் பெற முடியாது என்று காட்டியவர்களின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ளது. மாநில சட்டமன்றம் சட்டங்களை உருவாக்க  ஆளுநரை நியமிப்பது. ஆனால், அவர்கள் எங்கள் செயல்பாடுகளுக்கு தடையாகதான் இருக்கிறார்கள்.


தமிழகத்தில் பாஜக தனது ஊடுருவலை அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும், இந்துத்துவாவின் விரிவாக்கத்திற்கு தமிழ்நாட்டின் செய்ல்பாடுகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார்.


”தமிழ்நாடு இந்துத்துவா அடிப்படையில் மாறினால், அதுவே நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் நடைமுறையின் முடிவாக இருக்கும். எனவே அது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாட்டிலேயே பக்தி மார்க்கத்தை பின்பற்றும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்கு காரணம் இந்துத்துவம் அல்ல. ஏனெனில், நீண்ட காலத்திற்கு முன்பே மதத்தை ஜனநாயகப்படுத்தியதில் தமிழகம்தான் முன்னோடி. இங்கிருக்கும் கோயில்களில் யார் வேண்டுமானாலும் நிர்வாகியாகவோ, டிரஸ்டியாக இருக்கலாம்;  யார் வேண்டுமானாலும் கோயில்களைக் கட்டிப் பராமரிக்கலாம். அதுபோன்ற மதம் தொடர்பான பிரச்சனைகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்துவிட்டோம். நமது கலாச்சாரத்தைப் பற்றிய சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 3,000 ஆண்டுகளுக்கும் பழமையானவை. வன்முறை, தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அதை நாங்கள் வெறுக்கிறோம். தமிழ்நாடு மதவெறியை என்றும் வளர்க்காது.”


மோசமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டால், நாட்டில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்த அவர், “ மோசமான கொள்கைகளால் துருக்கி மற்றும் இலங்கை போன்ற நாடுகள் சுமைகளை எதிர்கொண்டன. அவர்களிடம் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய உதாரணங்கள்தான் இவை.  சர்வாதிகாரம் என்றுமே வளர்ச்சிக்கும் உதவாது.” என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண