தமிழ்நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.
தினசரி எண்ணிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (6,895), முதலாவது கொரோனா அலையின் போது பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பை விட குறைவாக இருந்தது. அதாவது, முதலாவது அலையின் உச்சகட்ட பாதிப்பை ( ஜூலை 27, 2020 - 6,988) விட இரண்டாவது அலையின் தினசரி பாதிப்பு தற்போது தான் குறையத் தொடங்கியுள்ளது. முதலாவது அலையின் போது, தமிழ்நாடு தனது உச்சகட்ட பாதிப்பை 120 நாட்களுக்குப் பிறகு எட்டியது (ஜூலை 27,2020). இரண்டாவது அலையில் வெறும் 60 நாட்களுக்குள் 36,184 (21, மே 2021)என்ற உச்சக்கட்ட பாதிப்பை கடந்தது.
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை:
மேலும், இரண்டாவது அலையின் போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபர்களின் எண்ணிக்கையும் (Active Cases), முதலாவது அலையின் போது பதிவு செய்த ஆக்டிவ் பாதிப்புகளை விட குறையத் தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது தேவைப்படும் மருத்துவ உள்கட்டமைப்பு வசிதிகள் (மருத்துவர்கள் எண்ணிக்கை, ஆக்சிஜன் படுக்கை வசதி) முதல் அலையின் போது பயன்படுத்த மருத்துவ உள்கட்டமைப்பு தேவைகளோடு குறையத்தொடங்கியுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தீவிர இணை நோய்கள் கொண்ட கொரோனா நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை:
தமிழ்நாட்டில் ஜூன் 22 நிலவரப்படி, வருடாந்திர இறப்பு விகிதம் 2.5% ஆக உள்ளது. 10 லட்சம் மக்கள்தொகையில் சராசரியாக 3 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில், முதலாவது அலையின் போது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 528 ஆகும். அதற்கு, முந்தைய நாட்களில் பதிவு செய்யப்படாத கொரோனா இறப்புகள் 2020, ஜூலை 22ம் தேதியன்று சேர்க்கப்பட்டதால், இந்த அதிகப்பட்ச எண்ணிக்கை பதிவானது. எனவே, ஜூன் 22ஐத் தவிர்த்து, முதலாவது அலையில் மாநிலத்தின் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை 127 ஆகும். இது, கடந்த்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பதிவிசெய்யப்பட்டது.
இரண்டாவது அலையில் மாநிலத்தின் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை 493 ஆகும். கோவை, திருப்பூர்,ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குணமடைவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, வரும் நாட்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 194 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதுமுதல் அலையின்போது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட (ஜூன் 22-ஐத் தவிர்த்து) அதிகமாகும்.
சென்னை, கோயம்பத்தூர், நீலகிரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
TamilNadu Coronavirus LIVE : டெல்டா பிளஸ் வகை கொரோனா அதிகமாக பரவக்கூடியது - மத்திய அரசு