இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் தாக்கம் மோசமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கமும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 335 நபர்கள் உயிரிழந்த நிலையில், கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 059 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று தொற்று பாதிக்கப்பட்ட 33 ஆயிரம் நபர்களில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 16 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 43 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதியானவர்களில் இதுவரை ஆண்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 980 நபர்களும், பெண்கள் 6 லட்சத்து 70 ஆயிரத்து 332 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேரும் அடங்குவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 18,718 நபர்களும், பெண்கள் 14 ஆயிரத்து 341 நபர்களும் அடங்குவர்,




கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று மட்டும் 21 ஆயிரத்து 362 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை இதுவரை தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 3 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசினால் 335 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 364 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 172 பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 939 நபர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 91 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.