Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 14 ஆயிரத்து 14 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 23வது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.சென்னையில் இன்று கொரோனாவிற்கு 935 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டும் 267 நபர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுவையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,684 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் என சுகாதாரத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மகாராணி. அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மருத்துவர்களும், உடன் பணிபுரிபவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கட்டுமானப் பணிகள் போற்கொள்ள ஏற்கனவே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும். வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 தரப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த 27 மாவட்டங்களில், இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயக்க அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3மாத காலத்திற்கு கோவிட் தொற்றுக்கான மருந்து & கருவி மீது 5% வரியை செலுத்துவதனால் அரசுக்கு வரும் தொகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தரவுகளின்றி முடிவெடுக்கப்படும் இம்முறையை மாற்றி இக்கட்டான நிலையில் இரக்கத்துடன் செயல்பட்டு 0-0.1%வரி விதிப்பதே ஏற்புடையது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.
தொற்று படிப்படியாக குறைந்து வரும் மாவட்டங்களில் தான் அதுவும் இரண்டு வாரம் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் தான் டாஸ்மாக் இப்போது திறக்கப்பட்டு உள்ளது. கடந்த காலத்தில் தொற்று தீவிரமாக உயர்த்த போது அதிமுக அரசு திறந்து வைத்திருந்தது போல் திறக்கபடவில்லை என தி.மு.க மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தின் 15 வட்டாரங்களிலும் மொத்தம் 10,700 பேருக்கு கோவேக்சின் முதல் தவணைத் தடுப்பூசியும், கோவிசீல்டு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்படுகிறது என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பிகார், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தை வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும், 18-44 வயது பிரிவில் உள்ள 2209641 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 7950 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்
நாடுமுழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 84,332 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இது, 70 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவான பாதிப்பு. தொடர்ந்து 30-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் குணமடைந்தனர்.
இதன்மூலம், தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 95.07 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாக பிரபல சர்வதேச பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை யூகத்தின் அடிப்படையில் இருப்பதாக மத்திய சுதாதாரத்துறை அமைச்சகம் விளக்கமலித்துள்ளது. எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியா கொரோனா இறப்பு எண்ணிக்கை தொடர்பாக விர்ஜினியா காமல்வெல்த் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டோபர் லாஃப்பெர் (Christopher Laffler) சர்வதேச நாளிதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சென்னையில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த மே 28ம் தேதி 108 என்ற உச்சகட்ட தினசரி இறப்பை அடைந்த பிறகு, தினசரி இறப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும், கடந்த 2 நாட்களாக பதிவாகும் கொரோனா இறப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
Background
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 15,108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 374 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 280-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வாசிக்க: முதல் தடுப்பூசி 70 சதவீதம் பாதுகாப்பு தரும்; வேலூர் கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் தகவல்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -