மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 May 2021 06:52 AM

Background

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையும் 18 வயது பூர்த்தி செய்தவுடன் மாதந்தோறும் உதவித்தொகையும், 23-வயதை எட்டும் போது 10 லட்சம் ரூபாயும், பஎம் கேர்ஸ் நிதியில் இருந்து  வழங்கப்படும் என்றும் மத்திய அரசு...More

மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மகாராஷ்ட்ராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 600 ஆக பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பின்னர் இதுவே அந்த மாநிலத்தில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும். அந்த மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்து 31 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 402 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது.