TN Corona LIVE Updates : காஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை!
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
பாதிப்பு குறைந்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனைப் படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்
மக்கள் அனைவரும் தயக்கமின்றி கோவிட்-19 க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதி 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
தமிழகத்தில், இன்று மதியம் 12 மணி வரை 42,687 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்கலின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 40 பல் நோக்கு மருத்துவ பணியாளர்கள் , 4 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முகக்கவச பயன்பாடு 95%க்கும் அதிகமாக இருந்தால், செப்டம்பர் 1ம் தேதிக்குள் கணிக்கப்பட்ட கொரோனா (Current Projections) இறப்பு எண்ணிக்கையில், 40,000 வரை குறைக்கலாம் என IHME ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் இன்றியமையாததாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து, முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது, சராசரி 100க்கு 77 சதவிகிதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். கொரோனா உயிரிழப்புகளை கட்டுக்குள் கொண்டு வர இந்த எண்ணிக்கை 95 சதவிகிதமாக அதிகரிக்கும் வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 25 வரை முக கவசம் அணியாததற்காக சுமார் 11 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
12-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,850 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது.கொரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. வெறும் 25 லட்சம் பேர் (25,86,782) மட்டுமே வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 9.60% ஆகும்.
ஏப்ரல் 27 முதல் மே 25 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 17,755 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 16,301 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 13,449 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபேவிபிரவிர் மாத்திரைகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 7.22 சதவிகிதம் பேர் மட்டுமே, கொரோனா தடுப்பூசியில் குறைந்தது ஒரு டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 18- 44 வயதுக்கு உட்பட்ட பயனாளிகள் கீழ்காணும் இடங்களில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு தடுப்பூசி நிலையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு செய்யப்பட்டுள்ளது .
சென்னையில் கடந்த 10 நாட்களாக, கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை ,தேனி, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து கொண்டு வருகிறது.
எனவே, தமிகத்தில் கொரோனா பாதிப்புகள் பரவத் தொடங்கியுள்ளது. 10 மாவட்டங்கள் புதிய ஹாட்ஸ்பாட்டுகளாக உருவாகியுள்ளன. மேற்கூறிய, 10 மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டர்வர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் தான் உள்ளது.
தமிழகத்தில், கிராமப்புற மக்களை அதிகம் கொண்ட மாவட்டங்கள் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒருவார காலத்துக்கு, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
சென்னை மாநகர மக்க, வாட்ஸ்அப் காணொளி காட்சி வழியாக வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக அரசு தடுப்பூசி மையங்களின் விவரப்பட்டியலை, https://stopcorona.tn.gov.in/vaccine_center.php என்ற வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,73,958 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதில், 1,70, 596 பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டது. கடந்த 30 நாளில் போடப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச டோஸ் எண்ணிக்கை இதுவாகும்.
முன்னதாக, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு தடுப்பூசி நிலையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்போடெரிசின்-பி 19,420 குப்பிகளை மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Background
கடந்த கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 34,285 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 468 பேர் பலியாகியுள்ளனர். இது, தமிழகத்தில் பதிவிசெய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச கொரோனா இறப்பு எண்ணிக்கையாகும்.
சுமார் 1.77 கோடி (1,77,67,850) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்றும், அடுத்த மூன்று நாட்களில், மேலும் 7 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -