நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




தமிழகததில் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 344 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் 39 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 071 நபர்கள் பலியாகியுள்ளனர்.


50 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலே சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்த 884 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் 300 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 65,635 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728.