மேலும் அறிய

CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?

CM Vijay MK Stalin Meeting: சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நேராக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார் முதலமைச்சர் விஜய். அப்போது அவர்கள் பேசியது என்ன.?

சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏ-க்கள் முறையாக பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, இன்றைய நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்னின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் விஜய். 

அப்போது, விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து, வீட்டிற்குள் வந்த விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். 

மு.க. ஸ்டாலின் - விஜய் பேசியது என்ன.?

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவிற்கு மு.க. ஸ்டாலின் வராத நிலையில், அவரை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் முதலமைச்சர் விஜய். அப்போது, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார் விஜய். தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், தனது தலைமையிலான புதிய அரசு சிறப்பாக செயல்பட ஆதரவையும், அறிவுரைகளையும் வழங்குமாறு  முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டார். 

முதல் நாளே விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முன்னதாக, முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! என விமர்சனம் செய்திருந்தார். 

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்! என பதிவிட்டிருந்தார்.

6 மாதங்கள் பார்ப்பேன் என்று கூறிய ஸ்டாலின்

முன்னதாக, விஜய் தேர்தலில் வெற்றியடைந்த நாள் அன்று பேட்டியளித்திருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 6 மாதங்கள் வரை புதிய அரசை விமர்சிக்க மாட்டேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget