நாளை நடைபெறும் 'இரும்பின் தொன்மை' எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்:

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு நாளை காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு:

தமிழர் மரபு, சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக முக்கிய ஆதாரம் ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் இன்னும் 15 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரின் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கின்றன. ஒருவேளை, மக்களுக்கு பயன் தரும் நோக்கில் சமூக நலத்திட்டம் தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளியாகலாம் என ஒரு தரப்பினர் தகவல் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்