MK Stalin: மாடர்ன் உடையில் துபாய் செல்லும் முதலமைச்சர் - வைரலாகும் புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்

Continues below advertisement

அரசு முறை பயணமாக துபாய் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் செல்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று நேரத்தில் துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார். நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது, முதலமைச்சரை பார்த்த திமுகவினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதலமைச்சரை வேஷ்டி, சட்டையில் பார்த்த அவர்களுக்கு, மாடர்ன் உடையில் வந்து ஆச்சர்யம் கொடுத்தார். பேண்ட், சட்டையின் ஜர்கின் போட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மாடர்ன் உடையில் வந்திருந்த முதலமைச்சரை  திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து  தனி விமான மூலம் துபாய்க்கு புறப்படவுள்ள முதலமைச்சர் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை  நாளை திறந்து வைக்கிறார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement