தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், இதுவரை வழங்கப்பட்டு வந்த இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள், இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும் உதவி தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அவற்றை பெற தகுதியுள்ள நல வாரிய உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 





இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர், வெளியிட்ட செய்தி குறிப்பு.



தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தமிழ்நாடு தூய்மைபணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்தலும், அவ்வாறு பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இது வரை வழங்கப்பட்டு வந்த நல திட்ட உதவிகளில் தற்போது பணியிடத்தில் விபத்து / மரணத்திற்கு உதவித் தொகை ரூ. 1,00,000/- லிருந்து ரூ. 5,00,000/- ஆகவும், விபத்து ஏற்பட்டு உறுப்புகளை இழந்தால் / சரிசெய்ய இயலாத அளவு இழத்தல் விபத்து ஊனம் உதவித்தொகை ஆகியவற்றிக்கு தற்போது ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப இதுவரை ரூ.10,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வழங்கப்பட்டுவந்தது.


 




கையினை இழந்ததால் ரூ. 50,000/- லிருந்து ரூ. 1,00,000/- ஆகவும், ஒரு காலினை இழந்தால் ரூ. 50,000/- லிருந்து ரூ. 1,00,000/- ஆகவும், ஒரு கண்முழுவதும் சரிசெய்ய முடியாத அளவு பார்வை இழப்பிற்கு ரூ. 50,000/- லிருந்து ரூ. 1,00,000/- ஆகவும், ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு முழுஇயலாமைக்கு ரூ. 25,000/- லிருந்து ரூ. 1,00,000/- ஆகவும், இயற்கை மரண உதவிதொகை ரூ. 1,50,000/- லிருந்து ரூ. 2,00,000/- ஆகவும், கல்வி உதவித்தொகை இருபாலருக்கும், முதன்மையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 2,000/- லிருந்து ரூ. 4,000/- ஆகவும், விடுதியில் தங்கி படித்தால் ரூ. 3,000/- லிருந்து ரூ. 5,000/- ஆகவும், தொழில் நுட்பபட்ட படிப்புககு ரூ. 2,000/- லிருந்து ரூ. 4,000/- ஆகவும், விடுதியில் தங்கி படித்தால் ரூ. 4,000/- லிருந்து ரூ. 6,000/- ஆகவும்,


 




 


தொழில்நுட்ப பட்ட மேற்படிப்புககு ரூ. 4,000/- லிருந்து ரூ. 6,000/- ஆகவும், விடுதியில் தங்கி படித்தால் ரூ. 6,000/- லிருந்து ரூ. 8,000/- ஆகவும், முதியோர் ஓய்தியம் ரூ. 400/- லிருந்து ரூ. 1,000/- ஆகவும், திருமண உதவித்தொகை தூய்மைப்பணி தொழிலாளர் அல்லது அவரது மகன் அல்லது அவரது மகள் குடும்பத்திற்கு இருமுறை மட்டும் ஆண்களுக்கு ரூ. 3,000/- ஆகவும், பெண்களுக்கு ரூ. 2,000/- லிருந்து ரூ. 5,000/- ஆகவும், ஈமச்சடங்கு உதவித்தெகை ரூ. 2,000/- லிருந்து ரூ. 5,000/- ஆகவும் இதர நல வாரியங்கலால் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுகிறது.


 




மேலும், 10 ஆம் வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்) ரூ.1,000/- மும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,000/- மும், 11 ஆம் வகுப்பு வரும் (பெண்களுக்கு மட்டும்) ரூ.1,000/- மும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் (பெண்களுக்கு மட்டும்) ரூ.1,500/- ம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500/ ம், ஜடிஜ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.1,000/- மும், விடுதியில் தங்கி படித்தால் ரூ. 1,200/- ம், கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் மகப்பேறு உதவியாக மாதம் 1க்கு ரூ.1,000/- வீதம் ரூ.6,000/- மும், கருச்சிதைவு / கருக்கலைப்பு ரூ.3,000/- மும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 


 





இந்த உதவித்தொகைகளை பெற தகுதியுள்ள தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களிடமிருந்து உரிய படிவத்தில் விண்ணப்பங்கள், உரிய வழிமுறையாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மாவட்ட மேலாளர், தாட்கோ, கரூர் அவர்களிடம் விண்ணப்பிக்கலாம். 


மேலும், விவரங்களுக்கு 04324-296486, 9445029463, 6380545106 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்கள் கட்டிடம் இரண்டாவது தளம் அறை எண் 61-ல் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்ற தகவலை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவிக்கின்றார்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண