விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுச்சேரி சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேம்பி மதுரா பூரி குடிசை சேர்ந்த பிரகாஷ்,38; வேலு ,40: இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்பி  கூறியதாவது;


தமிழ்நாட்டில்  நடப்பது திராவிட மாடல் ஆட்சியல்ல கள்ளச்சாராய ஆட்சிதான் நடைபெற்றுக் மக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ நாட்டில்  மூலை முடுக்குகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த அரசு, கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவில் மொத்தம் 73 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்திலும் , செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறிலும் கள்ளச்சாரய சாவில் 22 பேர் இறந்துள்ளனர்.


நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அடுத்த பூரி குடிசையில் பாண்டிச்சேரி கள்ளச்சாராய பாட்டில் அருந்தி 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் மருத்துவமனையில் உள்ள ஏழு பேர்களின் உறவினர்கள் கூட பார்க்க அனுமதிக்கவில்லை காவல்துறை மருத்துவமனையை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.


மக்களைப் பற்றி கவலைப்படாமல் இடைத்தேர்தலில் அராஜகம் செய்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் பணத்தை வாரி இறைத்து தேர்தலில் முழு கவனம் செலுத்தியுள்ளனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சாவில் இறந்தவர்களை 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முதல்வர் இதுவரை வந்து பார்க்கவில்லை அதேபோன்று காவல்துறையின் ஏடிஜிபி சங்கர் ஜிவால்  வந்து பார்த்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மக்களை ஏளனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.


நாட்டில் சட்டம் ஒழுங்கை டிஜிபி காப்பாற்ற  வேண்டும். அதனால்தான் நாங்கள் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளோம். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை காட்டிலும் டிஜிபிக்கு என்ன வேலை இருக்கிறது? உதயநிதிக்கு சேவை செய்வது தான் டிஜிபி வேலையா? இந்த ஆட்சி செய்கிற தவறுகளுக்கு டிஜிபி துணை போகிறார்.


தமிழகத்தில் நடக்கின்ற பல விஷயங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. காவல்துறை மாநில தலைவர் சிபி.சிஐ.டி தலைவருக்கு கள்ளச்சாராயம் குறித்து கடிதங்களை எழுதுகிறார். அதில் மரக்காணம் இறப்பு மெத்தனால்,எத்தனால் கலந்ததால்  ஏற்பட்ட சாவு ,எத்தனால் முறைபடுத்தவில்லை , அரசிடம் கூட  ஆவணங்கள் முறையாக சமர்பிக்கப்படவில்லை ,  தவறான விதிகளின் படி மெத்தனால் பலருக்கு  கொடுக்கப்பட்டுள்ளது.


முறையாக கண்காணிக்கவில்லை, சட்டத்தை முறைப்படுத்தவில்லை , அரசுக்கு தமிழகம் முழுவதும் எத்தனால் மெத்தனால் முறையில்லாமல் சப்ளை செய்யப்படுகிறது. கள்ளச்சாராயத்தால் உயிரழப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட போதிலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.


தமிழ்நாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செய்யார், மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராயம் சாவிற்கும், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவிற்கும் தமிழ்நாடு அரசு முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் அப்பாவி மக்கள் உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் குற்றவாளி என இவ்வாறு எம்பி சி.வி சண்முகம் எம்பி கூறினார்.