தி.மு.க. அரசு பொறுப்பேற்ற காலங்களில் மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, பெரியார் நகரில் நடைபெற்ற அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.


இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 'Tally' சான்றிதழ் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், "வளர்ச்சி அனைவருக்கமானதாக இருக்க வேண்டும்;  கல்வி எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே திராவிட அரசின் முதன்மையான நோக்கமாகும். அப்படி, யாருக்கும் கல்வி பெறுவதில் தடை இருப்பின், அந்த தடையைச் உடைத்தாக வேண்டும். தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோதெல்லாம் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.” என்று தெரிவித்தார்.


  சென்னை செனாய் நகரில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. பூங்காவை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (04/04/2023) மாலை திறந்து வைத்தார். 






புதுப்பொலிவுடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த பூங்காவை நவீன முறையில் மேம்படுத்தியது.  இந்த மேம்படுத்துதல் பணிகள் கடந்த 2018- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைக்கப்படுள்ளது.


இந்த நிகழ்வுக்குப் பிறகு முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சிங்காரச் சென்னை என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம்! அடுத்து, அமைச்சர் - முதலமைச்சர் என திட்டங்கள் வகுத்து அழகு மிளிர சென்னையை உருவாக்கினோம். இன்று செனாய் நகரில்  தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரிலான பூங்காவில் எழில் தென்றல் வீச சீரமைத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். 




மேலும் வாசிக்க.. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!


இதையும் படிங்க.Ayothi: பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய சசிகுமாரின் அயோத்தி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?