TN Budget 2025: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்காக இடம்பெற்றுள்ள திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசு பட்ஜெட்:


தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களிடன் அடிப்படை தேவைகளான வீடு, தரமான சாலை மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வேலைவாய்ப்புகளுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தனிநபர் வாழ்வாதாரம் மேம்படுவதன் மூலம், மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார சூழலும் மேம்படக்கூடும்.  இதன் காரணமாக உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன. அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


வீட்டு வசதி திட்டங்கள்:



  • ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், அடுத்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன

  • 25,000 பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன. 

  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்து 51 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 5,256 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.


சாலை மேம்பாட்டு திட்டங்கள்:



  • முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில், 6,100 கி.மீ., நீளமுள்ள சாலைகள் 2,200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மேம்படுத்தப்பட உள்ளன

  • மாநகராட்சி, நகராட்சி  மற்றும் பேருராட்சிகளில் 6,483 கி.மீ., நீளமுள்ள சாலைகள் 3750 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தரம் உயர்த்தப்படும். 

  • சென்னை திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கிமீ தூரத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.

  • செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் இருந்து  திருக்கழுக்குன்றம் வழியாக கிழக்கு கடற்கரைச்  சாலையில் உள்ள மாமல்லபுரம் வரை 28 கிமீ நீளத்திற்கு நான்கு வழிசாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்

  • கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை, திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள்  அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும்


வேலைவாய்ப்புக்கான திட்டங்கள்:



  • கோவை, பல்லடத்தில் செமி-கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

  • ஓசூர் மற்றும் விருதுநகரில் முறையே டைடல் மற்றும் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளன.

  • ஓசூரில் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்பட உள்ளது

  • மதுரை மற்றும் கடலூரில் இரண்டு காலணி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

  • திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பக பூங்கா அமைக்கப்பட உள்ளது

  • தூத்துக்குடியில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது

  • கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

  • கப்பல் இயந்திர உற்பத்திக்கான புதிய கொள்கை வகுக்கப்பட உள்ளது


இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களால் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். தனிநபர் வருவாய் உயர்வதோடு, மாநிலத்தின் உற்பத்தி திறனும் மேம்படும். இதனால் வாழ்வாதரம் மேம்பட்டு, மாநில அரசின் 1 ட்ரில்லியன் பொருளாதரம் என்ற இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.